தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரணடையாத சரவணபவன் அண்ணாச்சி! - சரவணபவன் உரிமையாளர்

Rajagopal

By

Published : Jul 8, 2019, 3:15 PM IST

Updated : Jul 8, 2019, 5:50 PM IST

2019-07-08 15:14:01

சென்னை: ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உரிமையாளர் ராஜாகோபாலை தவிர மற்ற எட்டு பேர் சரணடைந்துள்ளனர்.

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் பிணைக் காலம் ஜூலை 6ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்நிலையில் இன்று இவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவரை தவிர மற்ற எட்டு பேரும் சென்னை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஜூலை 4ஆம் தேதியே ராஜாகோபால் திருச்செந்தூரில் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை காரணம் காட்டி சேர்க்கப்பட்டுள்ளார். எனவே சரணடைய மேலும் கூடுதல் கால அவகாசம் கேட்டு ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது.

ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்ய விரும்பி அவரின் கணவரான சாந்தகுமாரை, ராஜகோபால் கூலிப்படை வைத்து கொன்றது உச்ச நீதிமன்றத்தில் நிரூபணமானது குறிப்பிடத்தக்கது.


 

Last Updated : Jul 8, 2019, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details