சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்(71) தனது ஓட்டலில் பணியாற்றும் ஊழியரின் மகளான ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். இதனால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் பூவிருந்தவல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ராஜகோபாலின் ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து ஜீலை 7ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.