சென்னை:தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகர்களில் ஒருவரான சரத்குமார், ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது மனைவியும் நடிகையுமான ராதிகாவின் உடல் நிலை குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும், பொய்யான தகவல்களை பதிவு செய்தும் சில யூடியூப் சேனல்கள் இழிவுபடுத்தி உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது தகுந்த நடவடிக்க எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான தகவல் பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் புகார்!
தனது மனைவி ராதிகாவின் உடல்நிலை குறித்து பொய்யான தகவல் பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகர் சரத்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பொய்யான தகவல் பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது சரத்குமார் பரபரப்பு புகார்!
இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது, நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியது ஆகியவற்றிற்கு சமூக வலைதளங்களில் சரத்குமார் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேரளத்து சாரல் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியின் ஹாட்டான போதை க்ளிக்ஸ் இதோ!