சென்னை:ஐபி கார்த்திகேயன், முரளிகிருஷ்ணா வங்கயாலபதி, வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்ரம் ஆகியோர் இணைந்து சரத்குமார், கௌதம் கார்த்திக் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மதுரை பின்னணியில் ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் இயக்குகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் CS இசையமைக்கிறார். ’புரொடக்ஷன் நம்பர் 9’ எனத் தற்போது அழைக்கப்படும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்ரம் தெலுங்கில் 'கார்த்திகேயா', 'காதலோ ராஜகுமாரி' போன்ற படங்களைத் தயாரித்தவர். தற்போது தமிழில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் ராஜ் வர்மா நடிப்பில் 'கேங்க்ஸ்டர் கிரானி' (Gangster Granny) என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
சரத்குமார், கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் கூறும்போது, "கௌதம் கார்த்திக், சரத்குமார் சார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் ஆர்வமும், அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் கூஸ் பம்ப்ஸ் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன்.