தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட 'சென்டிமீட்டர்' பட ஃபர்ஸ்ட் லுக்! - சந்தோஷ் சிவன் யோகி பாபு கூட்டணியில் உருவான‘சென்டிமீட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொலி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட 'சென்டிமீட்டர்' பட ஃபர்ஸ்ட் லுக்!
இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட 'சென்டிமீட்டர்' பட ஃபர்ஸ்ட் லுக்!

By

Published : May 8, 2022, 6:32 PM IST

சென்னை:ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'சென்டிமீட்டர்'. இதில் 'அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனும், ஷிவாஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் தயாரிப்பாளர் எம். பிரசாந்த் தாஸும் இணைந்து பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். இதற்காக பிரத்யேக காணொலி ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

'அசுரன்' படத்திற்கு பிறகு நடிகை மஞ்சு வாரியரின் நடிப்பில் உருவாகி இருப்பதாலும், படத்தின் தலைப்பு 'சென்டிமீட்டர்' என வித்தியாசமாக இருப்பதாலும், ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராமின் தோற்றம் கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதாலும், 'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படிங்க:ஆட்டோ டிரைவருக்கு மனைவியாகும் 'அசுரன்' நடிகை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details