சூரத் மருத்துவமனையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், ஆக்சிஜன் கருவியை பொருத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் மருத்துவர் சங்கேத் மேத்தா. வென்டிலேட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டதால், அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகரித்தது. சூரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் வென்டிலட்டர், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டும் நுரையீரல் பாதிப்பிலிருந்து அவரால் மீண்டுவர முடியவில்லை.
இந்நிலையில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையை தொடர்புகொண்டு மருத்துவர் சங்கேத் மேத்தா நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டார். எம்ஜிஎம் மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் நுரையீரலில் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது.