தமிழ்நாட்டிற்கு முன்பு மெட்ராஸ் மாகாணம் என்றே பெயர் இருந்தது. 1950களில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதை பலரும் வலியுறுத்தினர்.
அப்போது இதனை வலியுறுத்தி அரசியல் சாராத தமிழ் ஆர்வலராக சங்கரலிங்க நாடார், 1956ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி விருதுநகரில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா , சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம். தோழர் ஜீவானந்தம் உள்பட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச்சொல்லி கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனது கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவதாகக்கூறி சுமார் 76 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்க்கு பின், 1956ஆம் ஆண்டு ஆக்டோபர் 13ஆம் தேதி அவர் காலமானார்.