சென்னை:விழுப்புரம் மாவட்டம், சாலை அகரம் என்ற ஊரில், நித்யா என்பவரின் பட்டாசு கடையில், வெடிபொருள் துணை கட்டுப்பாட்டாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அக்கட்டடத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி, பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாகக்கூறி, பட்டாசு கடைக்கு, கடந்த அக்டோபர் 28இல் சீல் வைக்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்றி கடையை நடத்த அனுமதிக்கக் கோரி பட்டாசுக் கடை உரிமையாளர் நித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, உரிமம் பெற்று அனைத்தும் இயல்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் விதிமீறல் இருப்பதாகக் கூறி, கடைக்கு சீல் வைத்திருப்பதாகவும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சில நாட்கள் மட்டுமே நடத்தக்கூடிய வியாபாரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம்