சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
2023ஆம் ஆண்டு ஓய்வு பெற இருக்கும் இவரை தற்போது மேகாலயா உயர் நீதி மன்றத்திற்கு மாற்ற உச்ச நீதி மன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
75 நீதிமன்றங்களோடு 'சார்டர்ட் ஹைகோர்ட்' என்ற பெருமை கொண்ட சென்னை உயர் நீதி மன்றத்தில் இருந்து 3 நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்ஜிப் பானர்ஜி மாற்றப் பரிந்துரைக்கப்பட்டது வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனுவை மறுபரிசீலனை செய்யக்கோரி ஏற்கெனவே 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதி மன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வருகிற நவம்பர் 15அன்று(நாளை) வழக்கறிஞர்கள் சிலர் அமைதிப் போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.