சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பு, ஆக்ஷன், டயலாக் டெலிவரி மற்றும் நடனம் ஆகியவற்றுள் தனக்கென்று தனித்துவமான நடிப்பைக் வெளிப்படுத்தி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளார். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் அலங்கரித்துக் கொண்டாடுவர்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகத் திகழும் விஜய், தற்போது படத்தின் வசூலிலும் சக்கரவர்த்தியாக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் தயாரித்துள்ளனர். மாஸ்டர் படத்துக்குப் பின் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது.