கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற ஓடும் வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில், உதிரிபாகங்களைத் தொடாமல் சானிடைசர் வழங்கும் இயந்திரத்தை, சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது.
இந்த இயந்திரத்தை மின்சாரத்திலும், பேட்டரியிலும் பயன்படுத்த முடியும். கிருமி நாசினி திரவத்தையோ அல்லது ஜெல் வகை திரவத்தையோ பயன்படுத்தும்போது தேவையான அளவில் மட்டும் இந்த இயந்திரம் பயனாளிகளுக்கு வழங்கும். இந்த இயந்திரத்தினை உருவாக்குவதற்கான பணிகள் மார்ச் 2020ல் தொடங்கி, வடிவமைக்கப்பட்டுள்ளது.
சானிடைசர் வழங்கும் இயந்திரம்... சென்னை ஐஐடியின் புதிய உருவாக்கம்! - Chennai District News
சென்னை: சென்னை ஐஐடியானது உதிரிபாகங்களைத் தொடாமல் இயங்கும், தானியங்கி சானிடைசர் வழங்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
சானிடைசர் வழங்கும் இயந்திரம்
இதனை எங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்; இந்த இயந்திரத்தில் இருந்து 3 விநாடிகளில் 3 மில்லி லிட்டர் கிருமி நாசினியை பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு மிகவும் ஏற்றது.
மேலும் வகுப்பறைகள், அலுவலக இடங்கள், கடைகள் மற்றும் வணிகக் கட்டடங்களிலும் எளிதாக இதனைப் பயன்படுத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குறுந்தகவல் பயன்பாட்டுக்கு வழிவிடும் டிராய்