தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை பூந்தமல்லி பஜார் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (மார்ச் 6) நடைபெற்றது.
ஓட்டு சீட்டு முறை இல்லையா? அலுவலரை அதிர வைத்த பெண் அப்போது பொதுமக்களுக்கு அலுவலர்கள் பயிற்சி கொடுத்தனர். இதனிடையே அங்கு வந்த பெண் ஒருவர், "ஏன் சார் மீண்டும் மெஷின் வைக்கிறீங்க. ஓட்டு சீட்டு கொண்டு வாங்க" எனக் கேட்டார்.
அதற்கு அலுவலர்கள், "இதனை அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும்" என்று பதிலளித்தனர். உடனே அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: 100% வாக்களியுங்கள்: 'நமது வாக்கு நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை'