காஞ்சிபுரம் : உலகப்பிரசித்திபெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையானதுமான காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமையான இன்று வழக்கம் போல் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இன்று மாலை திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் காமாட்சியம்மன் கோயிலுக்கு தனது உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்திட வருகை புரிந்து காமாட்சி அம்மனை தரிசித்து, பின்னர் கோயிலில் உள்ள உள் பிரகாரத்தினை வலம் வந்து வேண்டி வணங்கி வழிபட்டுச் சென்றார்.
அண்மையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் பூரண உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி அவரது மனைவி துர்கா ஸ்டாலின் காமாட்சியம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முதலமைச்சரின் பூரண உடல் ஆரோக்கியத்திற்காக துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்! இதையும் படிங்க :பிரதமர் மோடி - ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட சந்திப்பு சாத்தியமா? - ஒற்றைத்தலைமை ஆட்டத்தில் காய் நகர்த்துகிறதா பாஜக?!