ஹைதராபாத்: ஆங்கிலத்தில் வெளியான 'சிட்டடெல்' என்னும் திரில்லர் தொடர், இந்தியாவிற்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது செர்பியா நாட்டில் வைத்து நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து சமந்தா, வருண் தவான் மற்றும் இதர நடிகர்கள், செர்பியாவில் தங்கள் நினைவுகளைப் பகிரும் வண்ணம் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
படப்பிடிப்பின் நிறைவைக் குறிப்பிடும் வகையில், பிரபல நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அங்கு ரசித்து உண்ட உணவின் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அதில், "நாம் மீண்டும் சந்திக்கும் வரை..." என்று குறிப்பிட்டு சிவப்பு நிற இதய எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்கும் சகிப் சலீம், தனது சமூக வலைதளப்பக்கத்தில், வருண் தவான் மற்றும் படத்தின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் சகிப் சலீம், "Schedule wrap" என்று எழுதி, சிவப்பு நிற இதய எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவிற்கு பலர் கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Priya bhavani shankar: கண்கவர் கருப்பு உடையில் பிரியா பவானி சங்கர் !
முன்னதாக வருண் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது ரசிகர்களைக் கவரும் வண்ணம் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் "Once upon a time in Serbia" என்றும் குறிப்பிட்டிருந்தார். வருண் தவானின் இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ரசிகர்கள் பலர் வருண் தவான் மீது உள்ள அன்பை கமெண்டுகள் மூலம் தெரிவித்திருந்தனர்.
மேலும், இம்மாதத் தொடக்கத்தில் செர்பியாவில் வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த படக்குழுவினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செர்பியா நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றபோது இது நிகழ்ந்தது எனக்குறிப்பிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவினை சந்தித்து, அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தது. குறிப்பாக, வருண் தவான் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். மேலும், 'சிட்டடெல்' படக்குழு குடியரசுத் தலைவரை சந்தித்ததின் மகிழ்வைப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தனர்.
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் உருவாகி வரும் 'சிட்டடெல்' தொடர். ஏற்கனவே ஆங்கிலத்தில் ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவான தொடரின் மறு உருவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Leo Movie Song: போஸ்டர் அடி அண்ணன் ரெடி.. பட்டையை கிளப்பும் விஜயின் லியோ பாடல்!