தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு - தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்‌ஷா) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும் என மாநிலத் திட்ட இயக்குநர் சுதன் தெரிவித்துள்ளார்.

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு

By

Published : Nov 12, 2021, 2:31 PM IST

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மேற்பார்வையிட்டு, நடைமுறைப்படுத்துவற்குப் பணியாளர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்‌ஷா) மாநிலத் திட்ட இயக்குநர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் கணினி பணியாளர்கள், திட்ட அலுவலர்கள், கட்டடப் பொறியாளர்கள் (சிவில் இன்ஜினியர்கள்), கணக்காளர், தணிக்கையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு 15 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

அறிக்கை

ஓய்வுபெற்றவர்களுக்குப் பொருந்தாது

இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1ஆம் தேதிமுதல் கணக்கிடப்பட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும். ஏற்கனவே அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, இந்தத் திட்டத்தில் ஆலோசகர்களாகப் பணியாற்றிவருபவர்களுக்கு ஊதிய உயர்வு பொருந்தாது. நவம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தாது" எனத் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் பணியாற்றிவரும் பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உருண்டு விழுந்த பாறைகள் - தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

ABOUT THE AUTHOR

...view details