சென்னை:தீபாவளி பண்டிகைக்காக ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக, ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்டவற்றுடன் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தீபாவளி பண்டிக்கைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை : ஆவின் அறிவிப்பு - rs 116 crore sales sweets announced aavin
தீபாவளி பண்டிக்கைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 82 கோடி 24 லட்சம் ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் இந்தாண்டு 200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.116 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 116கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்றுள்ளது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 40% விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் பயிற்சி