சேலத்தின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலை 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறையாகும். இந்திய மகா ரத்தினங்களுள் ஒன்றாகத் திகழும் இந்த நிறுவனம், செயில் (SAIL) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முக்கிய உற்பத்தியே ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) என்று கூறப்படும் துருபிடிக்காத எஃகு உற்பத்தியாகும். நாட்டின் நாணயம் தயாரித்தல், வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள், ரயில் பெட்டிகள், செயற்கைக்கோள்கள், அணு உலைகள் ஆகியவற்றிற்கு தேவையான ஸ்டீல்வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
சுமார் 136 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட 32 ஆயிரம் டன் உற்பத்தி திறனுடன் தொடங்கப்பட்ட இந்த உருக்காலையின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த உருக்காலை உலகில் மூன்றாவது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடாகவும் அதிகமாக இரும்பு பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா உள்ளது. அதனோடு சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்தான் மிகவும் தரமானதாகவும் உறுதியாகவும் இருக்கிறது.
இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு 10 விழுக்காடு தேவைப்பட்டாலும் அரசோ இதனை தனியார் மையத்திற்கு தாரைவார்க்க முனைப்புடன் செயல்படுகிறது. இந்த வர்த்தகம் எதிர்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணம் அண்மைக் காலமாக பொதுத் துறை நிகரான லாபம் ஈட்டுவில்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக சேலத்தில் இயங்கிவரும் உருக்காலையின் மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டதால், இதன் விற்பனைத் துறை முடங்கிப்போனது. இதனால், வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள் 70லிருந்து ஒன்பதாக சரிந்துள்ளது. இந்த உருக்காலையை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதனை மீறியும் சில முயற்சிகள் மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்திவரும் சேலம் உருக்காலை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "சேலம் உருக்காலை தொடங்கப்படுவதற்கு முன்புவரை இந்தியா உருக்கு இறக்குமதி செய்து வந்தது. தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது என சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான வேலைகள் 2017- 18ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. நிறுவனத்தை முழுவதுமாக விற்பனை செய்ய மத்திய அரசு சார்பில் விற்பனை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இதற்காக உலகளாவிய டெண்டரும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அரசின் டெண்டர் அறிவிப்பு கவர்ச்சிகரகமாக இல்லாததால் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதற்கு பிரதான காரணம் அரசின் தவறான மேலாண்மையே. 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆலை விரிவாக்கப் பணிகளில் செய்யப்பட்ட முதலீட்டால் சேலம் உருக்காலையை ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் வட்டி கட்டும் சூழலுக்குத் தள்ளப்பட்டது. இதனால் நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர சீனா, தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு உருக்கு இறக்குமதி செய்யப்படுவது, சேலம் உருக்காலைக்கு என தனி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படாதது, உருக்கு தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களின் இறக்குமதி வரி குறைக்காமல் இருப்பது ஆகியவையே தற்போதைய நிலைக்கு காரணம்" என்று அவர் தெரிவித்தார். மேலும் அவரிடம் சில கேள்விகளை நாம் முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்...