சென்னை:காளையார்கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வரலாற்று புதினம் ‘காலாபாணி’. மத்திய அரசு இந்த ‘காலா பாணி’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருதை அறிவித்துள்ளது. மு.ராஜேந்திரன் ஏற்கெனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சியாகவே 'காலா பாணி’ நூல் எழுதப்பட்டுள்ளது.
'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது! - Chennai District top News
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு முக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
அதாவது 1801-ம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார்கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட நாவல், காலா பாணி ஆகும். ராஜேந்திரன் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.