தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியான சாணிக் காயிதம் - திரைப்படக்குழு அதிர்ச்சி! - saanik kayitham new movie unofficially released in internet after it released in amazon prime

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான சில நிமிடங்களிலேயே யூடியூப் மற்றும் இணையத்தில் வெளியான சம்பவம் திரைப்படக்குழு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Keerthi suresh , Selva raagavan,சாணிக் காயிதம்
திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியான சாணிக் காயிதம்!

By

Published : May 6, 2022, 10:37 PM IST

சாணிக் காயிதம்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான சில நிமிடங்களிலேயே யூடியூப் மற்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் சாணிக் காயிதம். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து இதில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராக்கி படத்தை போன்று இதுவும் ஒரு பழிவாங்கும் திரைப்படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது.

திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியான சாணிக் காயிதம்!
அதிர்சியில் படக்குழுவினர்:இப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியது. ஆனால், படம் வெளியான சில மணி நேரத்திலேயே யூடியூப் மற்றும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலங்களில் புதிய படங்கள் வெளியானதும் உடனுக்குடன் இணையம் மற்றும் டெலிகிராமில் வெளியாவது தொடர்கதையாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details