இது தொடர்பாக சென்னையில் சாதிக் பாஷா மனைவி ரெஹேனா பானு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எனது கணவர் சாதிக் பாஷா கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டியவர்களை விசாரிக்காமல் எங்களை சிபிஐ கொடுமைப்படுத்தினர். அதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அதுக்கு பின்பும் இன்னும் நியாயம் கிடைக்கவில்லை.அவர் நினைவு நாளில் 'கூடா நட்பு கேடாய் முடிந்தது' எனும் தலைப்பில் நான் கொடுத்த விளம்பரத்தை அடுத்து, எனக்கும் தொடர்ச்சியாக கொலை வெறியுடன் மறைமுக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் நானும், என் குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை வருமோ என்ற அச்சம் உள்ளது. இதை தொடர்ந்து நான் நேற்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தேன். அவர்கள் மிக பொறுமையாக ஆறுதல் கொடுத்து நம்பிக்கை கொடுத்தனர். காவல் துறையினரும் தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
கணவரின் தற்கொலைக்கு அவர் கூறிய சாட்சியே காரணம். அதுவே அவருக்கு மன அழுத்தம் ஏற்படுத்திருக்கும் என்று சந்தேகம் உள்ளது. அந்த மன அழுத்தம் அவர் கூறிய வாக்கு மூலத்தால் ஏற்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தொழிலதிபர் ஷாஹித் பல்வா சந்திப்பு பற்றி சிபிஐயிடம் கூறியதுதான் முக்கிய காரணம். என் கணவருடன் நல்ல நட்பில் இருந்த ஆ. ராசா, அவர் இறந்த பின்பு வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறியது இல்லை. என் கணவரின் தற்கொலை வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்வேண்டும். எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்றார்.