தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைவருக்கும் காவி உடை தான் - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்!

சென்னை: நாம் அனைவரும் காவி உடையை அணிய போகிறோம் என்று இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசமாக பேசியுள்ளார்.

நாம்

By

Published : May 20, 2019, 6:35 PM IST

சென்னை கமலா திரையரைங்கில் 'காப்பாத்துங்க நாளைய சினிமாவை' என்ற குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், செங்கடேசன், பேரரசு, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியபோது, சினிமாவைக் காப்பாற்ற வேண்டியர்கள் சினிமாவைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. மாறாக சினிமா தொடர்பில்லாத இந்த படத்தின் இயக்குனர் ரவிராஜா சினிமா காப்பாற்ற படம் எடுத்துள்ளார்.

மேலும், அரசியலில் 90% பேர் திருடர்களாக உள்ளனர். எம்.ஜி.ஆருக்கு பின் சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்கிற உணர்வு எந்த அரசியல்வாதிகளிடமும் இல்லை. அரசியல்வாதிகள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுக்கு கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. இறுதியாக அவர் அனைவரும் காவி உடையைத்தான் அணிய போகிறோம் எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details