தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்ஏசி இயக்கும் 'நான் கடவுள் இல்லை'! - nan kadavul illai motion poster released

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி நடித்திருக்கும் 'நான் கடவுள் இல்லை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

motion poster
motion poster

By

Published : Sep 6, 2021, 7:18 PM IST

சென்னை: சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான திரைப்படங்களை இயக்குபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71 ஆவது படமாக உருவாகி இருக்கிறது 'நான் கடவுள் இல்லை' திரைப்படம்.

இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகினி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு மகேஷ் K தேவ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

'நான் சிவப்பு மனிதன்' பாணியில் 'நான் கடவுள் இல்லை'

க்ரைம் திரில்லர் படமான இதில் சமுத்திரகனி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினியை வைத்து எஸ்ஏசி இயக்கிய 'நான் சிவப்பு மனிதன்' படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

அந்த பட பாணியில் 'நான் கடவுள் இல்லை' படம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. படத்தின் ஆடியோ விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஹர்பஜனின் ‘பிரண்ட்ஷிப்’ டிரெய்லர் வெளியானது

ABOUT THE AUTHOR

...view details