கடந்த 2007ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன். இத்திரைப்படத்தை ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சன் தயாரித்திருந்தார். இப்படத்தின் வெளியீட்டிற்காக விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 15 நாளில் திருப்பித் தருவதாகக்கூறி, ஒரு கோடி ரூபாயை அப்பச்சன் கடனாகப் பெற்றிருந்தார். பின்னர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் வகையில், அப்பச்சன் கொடுத்த காசோலை வங்கிக் கணக்கில் பணமில்லாததால் இரண்டு முறை திரும்பி வந்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
காசோலை மோசடி வழக்கு - விஜய் படத் தயாரிப்பாளருக்குச் சிறை! - தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை
சென்னை: எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கில், அழகிய தமிழ் மகன் திரைப்படத் தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Sa chandrasekar file cheque bounce case against producer, 3 month imprisonments, Saidapet court order
பின்னர், தயாரிப்பாளர் அப்பச்சன் மீது கடந்த 2008ஆம் ஆண்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ், ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சனுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்ததுடன், ஒரு கோடி ரூபாயை, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு விரைவில் வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சகோதரியுடன் கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக மும்பை போலீஸ் மீண்டும் சம்மன்!