தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தல' அஜித்துடன் ரஷ்யா பறந்த 'வலிமை' டீம்!

'வலிமை' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.

ரஷ்யா பறந்த வலிமை டீம்
ரஷ்யா பறந்த வலிமை டீம்

By

Published : Aug 25, 2021, 6:05 PM IST

Updated : Aug 25, 2021, 10:20 PM IST

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தில் ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோரும் நடிக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. 'வலிமை' அப்டேட் கேட்டு நச்சரித்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்தது.

முக்கியமான சண்டைக்காட்சி

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்ட நிலையில் முக்கியமான சண்டைக்காட்சி மட்டும் கரோனா காரணமாக எடுக்கப்படாமல் இருந்தது.

இதன் படப்பிடிப்பு நாளை (ஆக.26) ரஷ்யாவில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐந்து நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும்; அதன் பிறகு முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.

ரஷ்யா பறந்த வலிமை டீம்

இதற்காக அஜித், இயக்குநர் ஹெச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று (ஆக.25) ரஷ்யா சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா பறந்த வலிமை டீம்

அப்போது அஜித்துடன் ரசிகர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:குடும்பத்துடன் எளியமுறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்... ட்விட்டரில் பகிர்ந்த விஜயகாந்த்!

Last Updated : Aug 25, 2021, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details