நடைபெற்று முடிந்த 27 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 315 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரண்டாம் நாளான இன்றும் தொடர்கிறது. இதுவரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 255 பதவியிடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் அதிமுக 97, திமுக 129, பாஜக 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய கம்யூனிஸ்ட் 7, தேமுதிக 2, காங்கிரஸ் 3, மற்றவை 13 என முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள், அதிமுக ஆயிரத்து 362, திமுக ஆயிரத்து 675, பாஜக 52, இந்திய கம்யூனிஸ்ட் 59, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 24, தேமுதிக 88, காங்கிரஸ் 94, என்சிபி 1 மற்றவை 629 என மொத்தம் 5 ஆயிரத்து 90 இடங்களில் 3 ஆயிரத்து 985 பதவியிடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.