தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2021, 10:36 PM IST

ETV Bharat / state

ஒரேநாளில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

குவைத், கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 46 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு குவைத்திலிருந்து வந்த விமான பயணிகளை, சுங்கத்துறை அலுவலர்கள் இன்று (நவ.10) கண்காணித்தனர். அப்போது விமானத்திலிருந்து வந்த பெண் பயணி மீது அலுவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவரை தடுத்து நிறுத்தி சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். உடனே அவரது உடைமைகள் சோதனை செய்தபோது அதில் ரூ. 18 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 488 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

367 கிராம் தங்கம் பறிமுதல்

அதேபோல் சார்ஜாவிலிருந்து, சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணியின் சூட்கேசில் பெண்கள் தலைக்கு அணியும் ஹர் பேண்ட், ஆகியவற்றில் தங்கம் மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. சுமார் 367 கிராம் இருந்த அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சத்து 6 ஆயிரம் ஆகும்.

மாத்திரைகளாக மறைத்துக் கொண்டுவந்த தங்கம்

உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட தங்கம்

கொழும்பிலிருந்து, சென்னை வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் தங்கத்தை மாத்திரைகளாக மறைத்துக் கொண்டுவந்த ரூ. 11 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 263 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓரே நாளில் மூன்று பேரிடமிருந்து ரூ. 46 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 118 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details