இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (டிச.8) காலை வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களைச் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணி தான் அணிந்திருந்த ஆடையை எட்டு தங்க பட்டன்கள் வைத்துத் தைத்திருந்ததும், மற்றொரு பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை இருந்ததும் தெரியவந்தது.