சென்னை:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,192 எனக் குறைந்துள்ளது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 13 என குறைந்துள்ளது.
புதியதாக கரோனா பாதிப்புகள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அக்டோபர் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 312 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,192 நபர்கள் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சையில் இருப்பவர்கள்
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 86 லட்சத்து 20ஆயிரத்து 998 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் 26 லட்சத்து 88 ஆயிரத்து 284 பேர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 570 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குணமானவர்கள்
இதுவரையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 423 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 37 ஆயிரத்து 802 என உயர்ந்துள்ளது.
மேலும், மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 9 நோயாளிகளும் என 13 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர்.
இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 912 என உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 150 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 130 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மிகக்குறைவாக தென்காசி மாவட்டத்தில் ஒரு நபருக்குப் புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை மாவட்டம் - 5,52,920
கோயம்புத்தூர் மாவட்டம் - 2,45,099
செங்கல்பட்டு மாவட்டம் - 1,70,566
திருவள்ளூர் மாவட்டம் - 1,18,841
ஈரோடு மாவட்டம் - 1,03,364
சேலம் மாவட்டம் - 99,105
திருப்பூர் மாவட்டம் - 94,455
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 76,960
மதுரை மாவட்டம் - 74,999
காஞ்சிபுரம் மாவட்டம் - 74,545
தஞ்சாவூர் மாவட்டம் - 74,722
கடலூர் மாவட்டம் - 63,832
கன்னியாகுமரி மாவட்டம் - 62,145
தூத்துக்குடி மாவட்டம் - 56,136