தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’இந்தி தெரியாது... தெரிந்த மொழியில் பதில் அளியுங்கள்’ - ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்! - தமிழ்நாடு செய்திகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியில் வழங்கப்பட்ட பதிலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, தனக்கும் இந்தி தெரியாது என நீதிபதி தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 28, 2021, 7:19 PM IST

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், ”தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை உள்துறை அமைச்சகத்திடம் கேட்டிருந்தேன்.

ஆனால் உள்துறை அமைச்சகம், நான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன், இந்தியில் பதில் அளித்திருந்தது. எனக்கு அந்த மொழி தெரியாது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே தெரியும். எனவே இந்தியில் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த மொழியில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று (ஜூலை.28) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்து, இந்த மனு குறித்து ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெண்கள் குத்துச்சண்டை: கால் இறுதிக்குச் சென்றார் பூஜா ராணி!

ABOUT THE AUTHOR

...view details