ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், சென்னை மூலக்கடை அருகே உள்ள பொன்னியம்மன்மேட்டில் உள்ள நவசக்தி கடம்பாடி சின்னம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சமுதாய பொங்கல் விழாவில் இன்று (ஜன.14) கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்க்கரை பொங்கலை போல இனிய சொற்களை நாம் பேச வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளால் சண்டைகள் வராமல் இருக்க
'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'
என்ற திருக்குறளை உணர்ந்து நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் எனப் பேசினார். முன்னதாக இதேக் குறளை, மோகன் பகவத் சிறுமி ஒருவருக்கு அவர் கற்றுக் கொடுக்கும் வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விழாவில் பேசுவதற்காக அவர் செய்துகொண்ட ஒத்திகையாகக்கூட இது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:'சர்க்கரை பொங்கல் போல் இனிய சொற்கள் பேச வேண்டும்'- ஆர்எஸ்எஸ் தலைவர்