ஆர்.எஸ். பாரதி இடைக்கால பிணையில் விடுவிப்பு - RSBharthi arrest update news
10:48 May 23
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டத்தில் பட்டியலின மக்களை அவமதிக்கும் விதமாகப் பேசியதாகத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து இன்று அதிகாலை அவர் கைதுசெய்யப்பட்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விசாரணையில் நீதிபதி செல்வக்குமார், ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டார். மேலும் வரும் ஜூன் ஒன்றாம் தேதி ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி பிணை பெற மனு அளிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆர்.எஸ். பாரதி கைது: கனிமொழி கடும் கண்டனம்!