கரோனா தடுப்பின் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி அலுவலகத்திலிருந்து இன்று (ஜூலை 18) தொடங்கிவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 13 ஆயிரம் பரிசோதனைகளை மாநகராட்சி மேற்கொள்கிறது. ஆர்டிபிசிஆர் முறையில் ஐந்து லட்சம் பரிசோதனைகளை கடந்த ஒரே மாநகராட்சி சென்னைதான். 100 நபர்களுக்கு பரிசோதனை செய்தால் 10 முதல் 12 நபர்களுக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மேலும், அதனை குறைக்க மாநகராட்சி முயற்சி செய்துவருகிறது. இன்று வரை கிட்டத்தட்ட 8.30 லட்சம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, அவரின் குடும்பத்தை தனிமைப்படுத்துவது, அந்த வீட்டை சுற்றி கிருமிநாசினி தெளிப்பது என அனைத்துப் பணிகளையும் 3:30 மணி நேரத்தில் முடித்து விடுகிறோம்.
பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ஊரடங்கு தொடங்கியது முதல் இன்று வரை 200 கோடி ரூபாய் பரிசோதனைக்கும், 30 கோடி ரூபாய் களப் பணியாளர்களுக்கு உணவு அளித்தல் என சுமார் 400 கோடி ரூபாய் மாநகராட்சி செலவு செய்துள்ளது. சென்னையில் இரட்டிப்பு தன்மை 47 நாளாக உள்ளது. மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி பின்பற்றினால் விரைவில் கரோனா கட்டுக்குள் வரும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா நெருக்கடியில் தலைவிரித்தாடும் வாடகை பிரச்னை: அரங்கேறும் வன்முறைகளுக்கு தீர்வுதான் என்ன?