தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சியில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ரூ.1,36,000 அபராதம்! - தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,36,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, 340 நபர்களின் மீது காவல் நிலையத்தில் மாநகராட்சி புகார் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 6, 2023, 10:31 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,36,000 அபராதம் விதிக்கப்பட்டு, 340 நபர்களின் மீது காவல் நிலையத்தில் மாநகராட்சி இன்று (பிப்.6) புகார் அளித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.

தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959-ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 11ஆம் தேதி முதல் இந்த மாதம் 1ஆம் தேதி வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,36,000 அபராதம் விதிக்கப்பட்டு, 340 நபர்களின் மீது காவல் நிலையத்தில் மாநகராட்சி புகார் அளித்துள்ளது. எனவே, பொதுமக்கள் சுவரொட்டிகளை தவிர்க்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் வைத்துள்ளது.

இதையும் படிங்க: ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளில் தாமதம் வேண்டாம் - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details