தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாளச் சாக்கடை அல்லது செப்டிக் டேங்க் பணியின் போது உயிரிழப்பு, வழங்கப்படும் இழப்பீடு உயர்வு - Greater Chennai Corporation

பாதாளச் சாக்கடை அல்லது கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கழிவுகளை அகற்றும் ஊழியர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தால் இனி ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு - மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கழிவுகளை அகற்றும் ஊழியர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தால் இனி ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு - மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

By

Published : Oct 5, 2022, 7:56 AM IST

சென்னை: பாதாளச் சாக்கடை அல்லது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளின்போது, உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களை கண்டறிந்து அவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த தொகை இனிவரும் காலங்களில் ரூ.15 லட்சமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ரூ.1.50 லட்சம் கூடுதலாக வழங்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்து, இதுதொடர்பாக மாமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி,

  1. பாதாளச் சாக்கடை அல்லது செப்டிக் டேங்க் பணியால் பாதிக்கப்பட்டவர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் ஈடுபடுத்தப்பட்டவராக இருந்தால், உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
  2. பாதாள சாக்கடை செப்டிக் டேங்க் பணியால் பாதிக்கப்பட்டவர் தனியார் அல்லது ஒப்பந்ததாரரால் ஈடுபடுத்தப்பட்ட நபராக இருந்தால், அந்த இழப்பீட்டுத் தொகையானது உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் அல்லது ஒப்பந்ததாரர் அல்லது முதலாளியால் வழங்கப்படும்.
  3. சம்பந்தப்பட்ட தனியார் முதலாளிக்கு முழு இழப்பீட்டுத் தொகையையும் செலுத்தும் திறன் இல்லை என்றால், மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதியிலிருந்து உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செலுத்த வேண்டும்.
  4. பாதாள சாக்கடை அல்லது செப்டிக் டேங்க் பணியால் பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி அமைப்புகளால் பணியமர்த்தப்பட்டவராக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முதன்மை முதலாளிகள் இழப்பீட்டுத் தொகையை உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு தங்கள் சொந்த ஆதாரங்களில் இருந்து செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க:மழைநீர் வடிகால்வாயில் விழுந்த ஐடி ஊழியர்..தொடையில் 35 தையல்களுடன் சிகிச்சை..

ABOUT THE AUTHOR

...view details