சென்னை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று மாலை கட்டுமான நிறுவனப் பணிக்காக வழக்கறிஞர் பிரபு என்பவர் 40,000 ரூபாய் பணத்தை லஞ்சமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் கொடுக்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஊழல் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் ஆறு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட விவரம் அதனைத்தெடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோன்று கொரட்டூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 3 லட்சத்து 42ஆயிரம் ரூபாயும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1 லட்சத்து 23ஆயிரம் ரூபாயும் என மொத்தம் ரூ 6.30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சாராயக் கடையில் துளைபோட்டு மதுபான பாட்டில்கள் திருட்டு! - முகந்தனூரில் பரபரப்பு