தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 20, 2022, 10:13 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் சைபர் கிரைமில் சிக்கி மக்கள் ரூ 175 கோடி இழந்துள்ளனர் - சைபர் கிரைம் காவல்துறை

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி பொதுமக்கள் 175 கோடி ரூபாய் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சைபர் கிரைமில் சிக்கிய மக்கள் ரூ.175 கோடி இழந்துள்ளனர் - சைபர் கிரைம் காவல்துறை
தமிழ்நாட்டில் சைபர் கிரைமில் சிக்கிய மக்கள் ரூ.175 கோடி இழந்துள்ளனர் - சைபர் கிரைம் காவல்துறை

சென்னை:தமிழ்நாட்டில் இணையவழி குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக பாஸ்போர்ட் மோசடி, வங்கி மோசடி, லிங்க் மோசடி, ஆன்லைன் லோன் ஆப் மோசடி என புதிது புதிதாக சைபர் கிரைம் குற்றவாளிகள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு செப்டம்பர் 18ஆம் தேதி வரை 62,767 மோசடி புகார்கள் வந்துள்ளதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் மோசடியில் ஈடுபட்டதாக 486 சைபர் கிரைம் குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகத் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் பொதுமக்கள் சைபர் மோசடியில் சிக்கி 175 கோடியே 19லட்சத்து 55ஆயிரம் ரூபாய் பறிகொடுத்து இருக்கின்றனர். அதில் வெறும் 33.45 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டு, 9.8 கோடி ரூபாய் மட்டுமே மீட்டு கொடுக்கப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சைபர் அரங்கம் எஸ்.பி ஸ்டாலின், ”ஆண்டுதோறும் சைபர் கிரைம் புகார்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 30% புகார்கள் பைனான்ஸ் ஸ்கேம் மூலம் மட்டுமே வந்துள்ளது.

இணையவழி மோசடியில் பணத்தை இழந்தோர் உடனடியாக 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக இழந்த பணம் மீட்டு தரப்படும். இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் 90% குற்றவாளிகள் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருப்பதால் பணத்தை மீட்பதற்கும், குற்றவாளிகளை நெருங்குவதிலும் காவல்துறையினருக்கு சிரமம் உள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். வெளி மாநிலங்களில் உள்ள சைபர் குற்றவாளிகளை எளிதாக பிடிப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள காவல்துறையினரை ஒருங்கிணைக்கும் வகையில் வெப்போர்டல் ஒன்றை தொடங்க உள்ளோம்;

அதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் அந்த மாநில கால்துறையினர் உதவியுடன் குற்றவாளிகளை எளிதாக நெருங்கலாம். இணைய வழியில் பணத்தை இழந்தோர் உடனடியாக புகார் அளிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சைபர் சப்போர்ட் ஆபிஸர் நியமிக்கப்பட்டுள்ளனர்;

மற்ற குற்றங்கள் போல அல்லாமல் இதில் முகத்தை காண்பிக்காமல் செய்யக்கூடிய குற்றம் என்பதால் காவல்துறையிடம் சிக்கமாட்டோம் என நினைத்து சைபர் குற்றவாளிகள் குற்றங்கள் செய்கின்றனர் ” எனக் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் ஓபியம் போதைப்பொருள் விற்பனை: இருவருக்கு சிறை

ABOUT THE AUTHOR

...view details