சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பாக இன்று(ஆக.1) தேர்தல் ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் திமுக சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி கூறியதாவது, “வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பாக இன்று(ஆக.1) தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றியுள்ள நிலையில் தற்போது இந்தக் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் வாக்குச்சாவடி மையத்தில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகின்றன.
திமுகவைப் பொறுத்தவரை வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதில் உடன்பாடு இல்லை. முதலில் வாக்காளர் பட்டியலை சீர் செய்து முழு சரியான வாக்காளர் பட்டியலை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும்.