கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சிக்கு, தமிழ்நாடு அரசு 88.42 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னை மாநகராட்சிக்கு ரூ.88.42 கோடி ஒதுக்கீடு! - கரோனா தடுப்பு நடவடிக்கை
சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநகராட்சிக்கு 88 கோடிய 42 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநகராட்சிக்கு ரூ.88.42 கோடி ஒதுக்கீடு
சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை மாநகராட்சியில் கரோனா சிகிச்சை பணியிலுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு ஓராண்டுக்கான ஊதியம் வழங்குவதற்காகவும், சுகாதார ஆய்வாளர், ஆய்வக பணியாளர், எக்ஸ்ரே பணியாளர், களபணியாளர் ஆகியோருக்கான 6 மாத ஊதியம் வழங்குவதற்காகவும் இப்பணம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.