சென்னை துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் துறைமுகத்தில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கம்போடியாவிலிருந்து வரும் சரக்கு கப்பலில் உள்ள கன்டெய்னரில் வெளிநாடு சிகரெட்டுகள் இருப்பதை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
சரக்கு கப்பலில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! - Rs. 7 crore worth of foreign cigarettes seized in Chennai
சென்னை: கம்போடியாவிலிருந்து சரக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
![சரக்கு கப்பலில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5043016-thumbnail-3x2-cig.jpg)
வெளிநாட்டு சிகரெட்டுகள்
மேலும் இந்தச் சோதனையில், மக்கும் தன்மையுடைய சாப்பாட்டு தட்டுகள் என்று குறிப்பிடப்பட்ட பெட்டிகளில், தட்டுகளுக்குப் பதிலாக சிகரெட்களை கடத்திவந்தது தெரியவந்தது. சிகரெட்டுகளை கடத்தும் நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் உணவகத்தில் தீ விபத்து - ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!