சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளைதிறந்து வைத்தார்.
ரூ.662.22 கோடி நகராட்சி நிர்வாக திட்டங்கள் தொடக்கம்! இதில், ரூ.8.93 கோடி மதிப்பீட்டிற்கான 5 புதிய திட்டப் பணிகளுக்குஅடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க : தண்ணீர் தரமாட்டோம் என்பது எந்தவிதமான மனிதாபிமானம்- கர்நாடக அரசுக்கு துரைமுருகன் கேள்வி