தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதையடுத்து சென்னையில் பொதுமக்கள் பலரும் வாகனங்களில் வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வாகன ஓட்டிகள் பலர் இருசக்கர வாகனங்களில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் முகக்கவசம் அணியாமலும் செல்கின்றனர்.
ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆணையர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றும் நபர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், சாலைகளில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இன்று முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் பயணிக்கும் நபர்களிடமிருந்து 179 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூல்! - chennai corporation
சென்னை: மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் காவல் துறையினர் 500 ரூபாய் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தளர்வின் காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளதால், போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, இன்று மட்டும் மூன்று மணி நேரத்திற்குள் முகக்கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்கிச் சென்றதாகக் கூறி சுமார் 17 பேரிடம், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாததாகக் கூறி மூன்று பேரிடம் அபராதத் தொகை வசூலித்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை இன்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இருசக்கர வாகனத்தில் ஒருவர் செல்லாமல் இருவர் சென்றாலோ அல்லது முகக்கவசம் அணியாமல் சென்றாலோ அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் அவசர தேவைக்காக பாஸ் வாங்கிவிட்டு வேறு மாவட்டங்களுக்குச் சென்று சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி வரும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒரு மாத சம்பளத்தை நிவாரண பொருள்களாக வழங்கிய டிஎஸ்பி