சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மைதீன்(37). டிரை ப்ரூட்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் லட்சக்கணக்கான ஹவாலா பணத்தை கமிஷன் அடிப்படையில் பல்வேறு வங்கி கணக்குகளில் ஏடிஎம் மையம் மூலமாக டெபாசிட் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படி ரூ. 1 லட்சம் ஹவாலா பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்தால், கமிஷன் தொகை ரூ.1,000 என்ற அடிப்படையில் மைதீன் செய்து வந்துள்ளார்.
நேற்றிரவு வழக்கம் போல கொத்தவால்சாவடியை சேர்ந்த நஜீம் என்பவர் கொடுத்த ரூ.9 லட்ச ஹவாலா பணத்தை ஏழு வங்கி ஏடிஎம்களில் செலுத்த மைதீன் சென்றுள்ளார். சென்ட்ரல் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள ஏடிஎம்களில் ரூ.3.78 லட்சம் பணத்தை டெபாசிட் செலுத்திவிட்டு, பின்னர் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் முகத்தில் கர்ஷிப் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் மைதீனை வழிமறித்துள்ளது.