தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேடிஎம் செயலியில் இருந்து ரூ.48 ஆயிரம் மாயம் - ஆன்லைன் திருட்டு கும்பலின் சதியா? - Paytm app

சென்னை: பேடிஎம் செயலியில் சேமிப்பு தொகையாக வைத்திருந்த 48 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

paytm wallet
paytm wallet

By

Published : Aug 26, 2020, 3:19 PM IST

சென்னை பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார் பன்சாரி (35). இவர் பேடிஎம் (Paytm) செயலியை நீண்ட மாதங்களாக பயன்படுத்தி வருகிறார். கடந்த மாதம் 18ஆம் தேதி இவரது பேடிஎம் சேமிப்பு கணக்கில் (wallet) வைத்திருந்த 47 ஆயிரத்து 705 ரூபாய் பணம் பிடித்துவிட்டதாக இவரது செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரவிகுமார், உடனடியாக பணம் திருட்டு சம்பவம் தொடர்பாக ஆன்லைன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இதுதொடர்பாக காவல் துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (ஆக.26) ரவிகுமார் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். விசாரணையில் பேடிஎம் செயலி மூலம் ரவிகுமார் எந்தவிதமான பணம் பரிமாற்றமும் செய்யவில்லை என காவல் துறைக்கு தெரியவந்தது.

இதனையடுத்து சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட பேடிஎம் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி நூதன மோசடி - ஆன்லைனில் பொருள் வாங்கும் போது உஷார்...!

ABOUT THE AUTHOR

...view details