சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள், மகளிர், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்காக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயல்படுகிறது.
2021 - 2022ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
அப்போது தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்களில், புதிய சமூக நல அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என அவர் அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்நிலையில் புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் தோற்றுவிப்பு, மாவட்ட சமூக நல அலுவலர் பணியிடங்கள் உருவாக்கல், அலுவலக உட்கட்டமைப்பு ஆகியவற்றின் செலவினங்களுக்காக ரூ. 4 கோடியே 98 லட்சத்து 41 ஆயிரம் பணத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து நேற்று(அக்.27) உத்தரவிட்டது.
இதையும் படிங்க:’அலுவல் ரீதியான கடிதத்தை சர்ச்சை ஆக்குதல் சரி அல்ல...’ - தலைமைச் செயலர் இறையன்பு