சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
தேர்தல் அலுவலர்களின் தீவிர வாகன தணிக்கை இந்நிலையில், மேற்கு தாம்பரம் தர்காஸ் அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தப் போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் காரில் சோதனையிட்டனர்.
அப்போது, காரில் இருந்து முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அவரை கைது செய்த அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க; புடவையில் அமைச்சர் படம்: பறிமுதல் செய்த பறக்கும் படை