இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் நோய்த்தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இதற்கான செலவை நன்கொடை மூலமும், அரசின் வருவாய் மூலமும் சரிகட்டி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் என பலரும் நன்கொடை வழங்கி வந்துள்ளனர். இவர்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி 21.7.2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் வரப்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 22.7.2020 முதல் 7.10.2020 வரை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:
- தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் 1 கோடி ரூபாய்
- கேஏஎல்எஸ் குருப் ஆப் கம்பெனிஸ், சென்னை 1 கோடி ரூபாய்
- ஹிந்துஸ்தான் பேங்க் லிமிடட் 95 லட்சம் ரூபாய்.
- நீதித்துறை பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் 49 லட்சத்து 56 ஆயிரத்து 851 ரூபாய்
- இராம. ராமநாதன், சேர்மன், கும்பகோணம் மீயூட்சுவல் பெனிஃபிட் ஃபண்ட் நிதி லிமிடெட், கும்பகோணம் 25 லட்சம் ரூபாய்.
- கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாராத்தான் 2020,23 லட்சத்து 41 ஆயிரத்து 726 ரூபாய்.
- டெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை 10 லட்சம் ரூபாய்.
- 7.10.2020 முடிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ரூபாய் ஆகும்.
மேலும், மேற்கண்ட நாள்களில் நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு