சென்னை விமானநிலைய சரக்குப் பகுதியில் எவா்சில்வா் எண்ணெய் விளக்குகள் என்ற பெயரில் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய இருந்த 5 பெரிய மரப்பெட்டிகளை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அந்த சோதனையில் மரப்பெட்டிகளில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் 1,050 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - chennai airport news
சென்னை: விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அதுகுறித்து விசாரணை நடத்தியதில், போலி ஆவணங்களுடன் செம்மரக்கட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. அதையடுத்து அவை பதிவுசெய்யப்பட்ட ஏற்றுமதி/இறக்குமதி அலுவலகத்தில் விசாரணை நடத்தியதில், டெல்லியைச் சோ்ந்த ஏற்றுமதியாளர் ஒருவரின் வாகனத்தில் இந்தப் மரப்பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:கேட்பாரற்று நின்ற கார் - ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்