தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.30.13 லட்சம் தங்கம், எலக்ட்ரானிக் பொருள்கள் கடத்தல் - விமான பயணி கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.30.13 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரூ.30.13 லட்சம் மதிப்பிலான தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தல் - விமான பயணி கைது
ரூ.30.13 லட்சம் மதிப்பிலான தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தல் - விமான பயணி கைது

By

Published : Jun 8, 2022, 1:38 PM IST

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரணை செய்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துசென்று சோதனை செய்தனர். அப்போது அவரின் உள்ளாடையில் 517 கிராம் தங்க தகடுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவரின் உடமைகளில் விலையுயர்ந்த ஐபோன்கள், லேப்டாப்கள் கொண்டுவந்ததும் தெரியவந்தது.

ரூ.30.13 லட்சம் தங்கம், எலக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல்
இதையடுத்து அவரிடமிருந்து சுமார் ரூ.30.13 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பயணியை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 20 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட இண்டிகோ விமானம் - பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்காதது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details