தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விதிமீறல்.. மாநகராட்சி சார்பில் இதுவரை ரூ. 2.81 கோடி வசூல்!

சென்னை: அரசின் வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து ரூ. 2 கோடியே 81 லட்சத்து 23 ஆயிரத்து 756 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chennai corporation
சென்னை மாநகராட்சி

By

Published : Oct 20, 2020, 8:56 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையின்றி பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

இதைக் கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தை மீட்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அங்காடி இயக்க அனுமதி வழங்கியது.

மேலும் தளர்வுகள் உடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் அரசு அறிவித்தது.

முகக்கவசம் அணிவது, இரண்டு மீட்டர் இடைவெளி உடன் தனிப்பட்ட இடைவெளியை கடைப்பிடித்து, சனிடைசர் கொண்டு சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்களும் ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து இன்று (அக்டோபர் 20) ஒரு நாளில் மட்டும் 4 லட்சத்து 25 ஆயிரத்து 550 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தொடங்கியது முதல் இன்றைய நாள் வரை ரூபாய் 2 கோடியே 81 லட்சத்து 23 ஆயிரத்து 756 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷேர் ஆட்டோக்களில் ’நேக்காக’ நகை திருடும் பிரபல பெண் கும்பல் கைது

ABOUT THE AUTHOR

...view details