தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரிகள், அணைகளைப் புனரமைக்க ரூ.189 கோடி ஒதுக்கீடு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஏரிகள், அணைகளைப் புனரமைக்க ரூ.189 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Stalin
Stalin

By

Published : Oct 11, 2021, 1:42 PM IST

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில் அணைகள், ஏரிகள் கரையை வலுப்படுத்துதல், மதகுகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளைப் போர்க்கால அடிப்படை மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்கட்டமாக 18 ஏரிகள், அணைகள் புனரமைக்கு பணி முதல்கட்டமாக முடிவுற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக 16 பணிகள் நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்திற்குள்பட்ட செய்யாறு, சின்னாறு, கும்மிடிப்பூண்டி, மணிமுக்தாநதி, பரவாறு, வேகாவதி உள்ளிட்ட அணைக்கட்டுகள் 171 கோடியே 73 லட்சம் மதிப்பிலும், திருச்சி மருதையாறு, மதுரை நம்பியாறு உள்ளிட்ட பணிகளுக்குச் சேர்த்து 189 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அறநிலையத் துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details